மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
8 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
12 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
12 hour(s) ago
தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம்,உசிலம்பட்டி, சோழவந்தான்(தனி), ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 16,20,419 பேர் ஆவர். இதில் ஆண்கள் 7.95 லட்சம், பெண்கள் 8.24 லட்சம், மூன்றாம் பாலினத்தவர்கள் 218 பேர் ஆவர். இதில் உசிலம்பட்டி சட்டசபை தொகுதியை தவிர பிற சட்டசபை தொகுதிளில் பெண் வாக்காளர்கள் அதிகம். 6 தொகுதியிலும் சேர்த்து மொத்தம் 1788 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக 231 கண்டறியப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் மார்ச் 20 முதல் 27 வரை நடந்தது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நா.த.க., வேட்பாளர்கள் உட்பட 37 பேர் 43 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மறுநாள் நடந்த வேட்புமனு பரிசீலனையில் மனுவில் போதிய விபரம் இல்லாதது, தவறாக பூர்த்தி செய்தல் உள்ளிட்ட காரணங்களால் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 29 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நேற்று மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் இதில் 4 சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். இதனால் தேனி தொகுதியில் 25 பேர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரத்தில் 16 சின்னங்கள் மட்டும் பொருத்த முடியும் என்பதால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி,ஓட்டளித்தை காட்டும் இயந்திரம் (வி.வி.பேட்), பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஒரு ஓட்டுப்பதிவு கருவி எனவும், தாலுகாவிற்கு கூடுதலாக 20 சதவீத ஓட்டுப்பதிவு கருவிகள் அனுப்பபட்டுள்ளன. வரும் நாட்களில் கூடுதல் ஓட்டுபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடக்க உள்ளது. மேலும் தாலுகா அலுவலகங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி ஏப்.,9,10ல் நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago