உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

தேனி : தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பள்ளி அலுவலக உதவியாளர் மாதவன் 34, - சித்ரா 27 தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இத்தம்பதிக்கு 2018 மே 27ல் திருமணம் நடந்தது. சித்ரா கர்ப்பமாகி கம்பம் அரசு மருத்துவமனையில் தொடர் பரிசோதனை செய்தார். பின் 2024 ஜூலை 24ல் கம்பம் தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. இயல்பாக பிறக்கும் குழந்தைகள் 2 கிலோ 600 கிராம் முதல் 3 கிலோ 200 கிராம் எடையில் இருக்க வேண்டும். ஆனால் சித்ராவின் 3 குழந்தைகளும் எடை குறைவாக தலா 900 கிராம் எடையில் இருந்தன. தொடர் பராமரிப்பிற்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு 22 நாட்கள் குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் செல்வக்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின் தற்போது குழந்தைகளின் எடை தலா ஒரு கிலோ 700 கிராம், 2 கிலோ 100 கிராம், 2 கிலோ 300 கிராம் என அதிகரித்து மூன்று குழந்தைகளும் நலமாக உள்ளனர். தாய் கூறுகையில், பிரசவத்தில் ஏற்பட்ட சிரமம் குழந்தைகளின் முகங்களை காணும்போது மறந்து விட்டது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை