உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மே மாதத்தில் மூன்று மடங்கு மழை 6 ஆண்டுகளை விட அதிகம்

மே மாதத்தில் மூன்று மடங்கு மழை 6 ஆண்டுகளை விட அதிகம்

தேனி : மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 'மே' மாதத்தில் பெய்த மழை அளவை ஒப்பிடுகையில் இந்தாண்டு மே யில் பெய்த மழை அதிகமாகும்.தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தாண்டு மார்ச், ஏப்., மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மே மாத துவக்கத்தில் இருந்தே மாவட்டத்தில் பரவலாக மழை பதிவானது. சில இடங்களில் கனமழையும் பெய்தது. கோடை விடுமுறை, கத்தரி வெயிலின் தாக்கம் இன்றி மழை அதிகம் இருந்தது. மாவட்டத்தில் மழை அளவினை பதிவு செய்ய 13 இடங்களில் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது.கடந்த மாதம் அதிகபட்சமாக சோத்துப்பாறையில் 371.5 மி.மீ., பெரியகுளத்தில் 360.7 மி.மீ., என மாவட்டத்தில் 2479.7 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக மாவட்டத்தில் 190.62 மி.மீ., மழை பதிவாகியது. 'மே' மாதம் 64.5 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இதனை விட கூடுதலாக 126.12 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.இந்த மழையளவு கடந்த 6 ஆண்டுகளில் மே மாதம் பெய்த மழை அதிகமாகும். மாவட்டத்தில் 2019ல் சராசரி 65.93 மி.மீ., 2020ல் 71 மி.மீ., 2021ல் 177.7 மி.மீ., 2022ல் 70.89 மி.மீ., 2023ல் 102 மி.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை