உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புலிகள் இறப்பு குறைவு: காப்பக அதிகாரிகள் மகிழ்ச்சி

புலிகள் இறப்பு குறைவு: காப்பக அதிகாரிகள் மகிழ்ச்சி

கம்பம்:புலிகள் இறப்பு 29 சதவீதமாக குறைந்துள்ளது என்று தேசிய புலிகள் பாதுகாப்பு முகமை அறிக்கையை மேற்கோள் காட்டி புலிகள் காப்பக அதிகாரிகள் கூறியுள்ளனர்.இது குறித்து ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் 19 ம் நூற்றாண்டில் 40 ஆயிரம் புலிகள் இருந்துள்ளது. ஆனால் 1972 ல் அது 1411 ஆக குறைந்தது. இந்தியா முழுவதும் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. மேகமலை புலிகள் காப்பகம் இந்தியாவின் 51 வது காப்பகமாக உள்ளது.புலிகள் இறப்பு 2020ல் 106, 2021ல் 127, 2022ல் 121, 2023ல் 178, 2024 ல் ஜனவரி முதல் ஜூலை வரை 81 ஆகும். அதாவது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 114 புலிகள் இறந்துள்ளது. இந்தாண்டு 81 இறந்துள்ளன. இறப்பு 29 சதவீதம் குறைந்துள்ளது. புலி குட்டிகள் இறந்த விவகாரத்திலும் 2023ல் 13 ஆகவும், இந்தாண்டு 8 ஆகவும் குறைந்துள்ளது. 2022 கணக்கெடுப்பு 2023ல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி