உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ஆலோசனை

ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ஆலோசனை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தல், போக்குவரத்து நெருக்கடி சரி செய்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. ஆண்டிபட்டி வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். வணிகர் சங்க பேரமைப்பைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆண்டிபட்டியில் பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லாததால் சமீப காலமாக இப்பகுதியில் செயின்பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போக்குவரத்திலும் கட்டுப்பாடு இன்றி பலரும் சிரமப்படுகின்றனர். இதற்கான தீர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆண்டிபட்டி கடைவீதியில் நிலவும் நெருக்கடியை தவிர்க்க ஒரு வழி பாதையாக மாற்றுவது குறித்த கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆண்டிபட்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கவும், போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை நகர் நல கமிட்டி தலைவர் மீனாட்சிசுந்தரம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை