புகையிலை பறிமுதல்
ஆண்டிபட்டி: ராஜதானி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ராஜதானி எஸ்.ஐ., முஹம்மது யஹ்யா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். சித்தார்பட்டியில் தாமரைசெல்வி 60, என்பவர் கடையில் சோதனை மேற்கொண்டனர். அரசால் தடை செய்யப்பட்ட 85 புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது. புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.