உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சி

வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சி

தேனி,: தேனியில் வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி, துணை அலுவலர்களுக்கு புள்ளியியல் துறை சார்பில் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.தேனி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் புள்ளியியல் துறை சார்பில் உதவி இயக்குனர் ராம்குமார், தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கடமலைகண்டு வட்டாரத்தில் பணிபுரியும் வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி, துணை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினார். பயிற்சியில் பயிர் அறுவடையின் போது மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி விளக்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிரில் எவ்வளவு அறுவடை செய்யப்படுகிறது என்பதை கண்டறிய மாவட்டத்திற்கு 3,4 இடங்கள் தேர்வு செய்யப்படும். நிலத்தில் அறுடையாகும் பயிர் அளவை வைத்து மகசூல் தோராயமாக கணக்கிடப்படுகிறது. அதற்காக செயல்விளக்க பயிற்சி, களபயிற்சி வழங்கப்பட்டது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை