உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மணற்கேணி செயலி மூலம் கற்றல் திறனை மேம்படுத்த பயிற்சி

மணற்கேணி செயலி மூலம் கற்றல் திறனை மேம்படுத்த பயிற்சி

கம்பம்: மணற்கேணி செயலி மூலம் மணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி என ஆசிரியர்களுக்கான கணினிப்பொறி சார்ந்த தகவல் தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட கணிப்பொறி சார்ந்த தகவல் தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. ஓடைப்பட்டி, குச்சனூர், எரசக்கநாயக்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கருத்தாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் உயர் தொழில் நுட்பத்தின் மூலம் மென்பொருள் தட்டச்சு தமிழில் செய்தல், கற்றல் கற்பித்தல் மென்பொருள் வளங்கள் தயாரித்தல், செயற்கை நுண்ணறிவு கற்றல் ,கற்பித்தல் செயல்பாட்டில் பயன்படுத்துதல், உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள மென் பொருள் வளங்களை மாணவர்களுக்கு பயன்படுத்துதல், கூகுள் டிரைவ் மூலம் கோப்புகளை பாதுகாத்தல், மணற்கேணி செயலியை பயன்படுத்தி மாணவர்களின் தானே கற்றல் திறனை மேம்படுத்துதல் பயிற்சி வழங்கப்பட்டது.பயிற்சியை உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நாகஜோதி தொடங்கி வைத்தார். ஆசிரிய பயிற்றுநர்கள் சாமுண்டீஸ்வரர், லூகாஸ், மரிய நான்சி, ஆகியோர் கண்காணிப்பாளர்களாக செயல்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை