| ADDED : ஆக 07, 2024 05:27 AM
மூணாறு : மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் நிலச்சரிவில் பலியானவர்களுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.அங்கு 2020 ஆக.6ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் உள்பட 70 தமிழர்கள் பலியாகினர். அந்த துயர சம்பவம் நடந்து நான்காம் ஆண்டான நேற்று, அனைவரையும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பலியானவர்களின் உறவினர்கள், தோட்ட தொழிலாளிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.மவுன ஊர்வலம்: மூணாறு டூரிஸ்ட் டாக்சி டிரைவர்கள் சங்கம் சார்பில் வயநாட்டில் நிலச்சரிவில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடந்தது. அதன்பிறகு பெட்டிமுடியில் நிலச்சரிவில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சங்கத்தின் தலைவர் நவீன், துணை தலைவர் ரவிசந்திரன், இணை செயலாளர் சிமியோன், பொருளாளர் வினோத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.