உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செக்யூரிட்டியை தாக்கிய இருவர் கைது

செக்யூரிட்டியை தாக்கிய இருவர் கைது

மூணாறு: மூணாறில் டாடா மருத்துவமனையில் செக்யூரிட்டியாக காலனியைச் சேர்ந்த சூசைமுத்து 58, பணியாற்றுகிறார். அவர் பணியில் இருந்தபோது, விபத்தில் காயமடைந்தவரை பார்க்க வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து டாக்டர்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்தனர். அது குறித்து கேட்ட சூசைமுத்துவை பலமாக தாக்கினர். அவர் பலத்த காயமடைந்தார். மூணாறு காலனியை சேர்ந்த கார்த்திக் 23, திருச்சூரை சேர்ந்த கார்த்திக் 19, ஆகியோரை மூணாறு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி