உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது

ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் வசந்தி 54, அப்பகுதியில் மகளிர் குழு அமைத்து சேவை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் நாழிமலை விநாயகர் கோயில் அருகே பணியில் இருந்தார். அப்போது டி.புதூரைச் சேர்ந்த லாரன்ஸ், கேசவன் மற்றும் பெயர் விலாசம் தெரியாத இருவர் அப்பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இது குறித்து வசந்தி தட்டி கேட்டுள்ளார். அப்போது நால்வரும் சேர்ந்து வசந்தியை அசிங்கமாக பேசி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.4500, அரை பவுன் மோதிரம் பறித்து ஓடி விட்டனர். வசந்தி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் லாரன்ஸ், கேசவன் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை