உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சந்தன மரங்களை கடத்திய இருவர் கைது

சந்தன மரங்களை கடத்திய இருவர் கைது

கூடலுார்: கேரளா வண்டிப்பெரியாறு நெல்லி மலை தேயிலை தோட்டத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.வண்டிப்பெரியாறு பசுமலையைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் 32, ஜோமோன் 37. இவர்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 8 கிலோ சந்தன கட்டைகளை ரேஞ்சர் அனில்குமார் தலைமையிலான வனத்துறையினர் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள மோப்பநாய் உதவியுடன் இவர்களை வண்டிப்பெரியாறில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பிடித்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ