உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புலியிடம் சிக்கி இரு பசுக்கள் பலி

புலியிடம் சிக்கி இரு பசுக்கள் பலி

மூணாறு: மூணாறு அருகே மேய்ச்சலுக்குச் சென்ற இரண்டு பசுக்கள் புலியிடம் சிக்கி பலியாகின.மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான பெரியவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்தவர் நேசம்மாள். இவருக்குச் சொந்தமான இரண்டு பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை.தொழிலாளர் குடியிருப்புகளின் அருகே தேயிலை தோட்டத்தில் இரண்டு பசுக்களும் இறந்த நிலையில் கிடந்தது. அவற்றை புலி தாக்கி கொன்றதாக தெரியவந்தது. அதனை சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வனத்துறையினர் உறுதி செய்தனர். அப்பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு மூன்று புலிகள் நடமாடியதை சிலர் பார்த்தனர். அது போன்று கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் ஏப்.26ல் மூன்று புலிகள் நடமாடின. அவை பெரியவாரை எஸ்டேட் லோயர் டிவிஷன் பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. புலிகளின் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை