| ADDED : மே 06, 2024 12:42 AM
தேனி : தேனி லட்சுமிபுரம் சீரடி அன்ன சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. சுந்தரவடிவேல் அடிகளார் தலைமையில் பிரம்ம சித்தயாகம் நடந்தது. விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், பிரகாஷ் கன்ஸ்ட்ரக்ஷன் வசந்த், பொறியாளர்கள் பாலமுருகன், சிவக்குமார், அல்லிநகரம் திருப்பதி தேவஸ்தான பக்தர்கள் சங்க நிர்வாகிகள், ஹிந்து எழுச்சி முன்னணி தலைவர் ராமராஜ், பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா, வழக்கறிஞர் சிவக்குமார், வார்டு செயலாளர் பவுன்ராஜ், ஜெரி கன்ஸ்ட்ரக்ஷன் குலோத்துங்கன், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி வாரிய இணைய மேலாளர் ராஜாஅழகணன், சாப்ட்வேர் இன்ஜினியர் சுதாகர், சுருளிராஜ், ஜே.ஆர்., கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் முத்துராமலிங்கம், குருராதாகிருஷ்ணன், மணிகார்த்திக்,சாந்தகுமார், சேது உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சகர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ராஜன், ரேணுகா செய்திருந்தனர்.