உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி தேரோட்ட திருவிழா நேரடி ஒளிபரப்பு

வீரபாண்டி தேரோட்ட திருவிழா நேரடி ஒளிபரப்பு

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா உற்ஸவ தேரோட்டம் லைப் கேபிள் நெட்ஒர்க் சார்பில் ஒளிப்பரப்பப்பட உள்ளது' என, இயக்குனர் நாராயணபிரபு தெரிவித்தார்.அவர் கூறியிருப்பதாவது: வீரபாண்டி சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை லைப் கேபிள் நெட்ஒர்க், கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை, நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, எம்.எம்., பல் மருத்துவமனை, மாஸ்டர் சேப்டி சி.சி.டி.வி., ஸ்ரீ விநாயகா பைப்ஸ் அண்டு எலக்ட்ரிக்கல்ஸ், லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஒளிபரப்புகின்றனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான கவுமாரியம்மன் உற்ஸவ தேரோட்டம் இன்று நடக்க உள்ளது. இதனை மாவட்டத்தில் முதன்முறையாக பக்தர்கள் கேபிள் நெட்ஒர்க்கினை கண்டு களிக்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை