உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி திருவிழா: ராட்டினம் பஸ் நிறுத்தங்களில் கலெக்டர் ஆய்வு

வீரபாண்டி திருவிழா: ராட்டினம் பஸ் நிறுத்தங்களில் கலெக்டர் ஆய்வு

தேனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.இக்கோயின் சித்திரை திருவிழா மே 7 ல் துவங்கி, மே 14 வரை நடக்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவிற்கு வந்து செல்வர் என்பதால் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நேற்று கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். இதில் கோயிலுக்கு பின்பகுதி, பைபாஸ் ரோட்டிற்கு முன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போதிய இடவசதி குறித்து ஆய்வு செய்தார். பின் ராட்டினம் அமைந்துள்ள மைதானத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். பின் கோயில் வளாகம், பிற பகுதிகளில் உள்ள நிரந்தர கழிப்பறை, பயோ டாய்லெட்கள் , ஆய்வு செய்தார். ஆய்வின் போது எஸ்.பி., சிவபிரசாத், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன், கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் சந்திரகுமார், உதவி மாவட்ட அலுவலர் குமரேசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை