உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

பெரியகுளம்: வடுகபட்டி பேரூராட்சிக்கு வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யாததால் 6 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தாமரைக்குளம் கண்மாயில் போர்வெல் அமைத்தும், சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து 3 மேல்நிலைத் தொட்டியிலிருந்து தினமும் 13 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.இதில் அதிகபட்சமாக வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 8 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.9 நாட்களாக வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் சப்ளை செய்யவில்லை. இதனால் வடுகபட்டியில் 6 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.பேரூராட்சி தலைவர் நடேசன் கூறுகையில்,' கூட்டு குடிநீர் திட்டம் செயற்பொறியாளர் ராமச்சந்திரனிடம் பிரச்ைன குறித்துஇரு முறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ