உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனவிலங்குகள் நடமாட்டம் மூணாறில் பரிதவிக்கும் மக்கள்

வனவிலங்குகள் நடமாட்டம் மூணாறில் பரிதவிக்கும் மக்கள்

மூணாறு : மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானை, காட்டு மாடு, புலி, சிறுத்தை உள்பட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.லாரியை வழி மறித்து கடந்த ஒரு மாதமாக மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித் திரியும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு நாட்களாக கூடாரவிளை எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட படையப்பா நேற்று பகல் 1:30 மணிக்கு அப்பகுதிக்கு உரம் ஏற்றி சென்ற லாரியை வழி மறித்து உர மூடைகளை சேதப்படுத்தியது. வனத்துறை அதிரடி படையினர் படையப்பாவை காட்டிற்குள் விரட்டியதால் வேறு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.காட்டு யானைகளை போன்று காட்டு மாடுகளும் குடியிருப்பு பகுதிகளில் அதிகம் நடமாடுகின்றன. மூணாறு நகரில் உள்ள டாடா மருத்துவமனை வளாகத்தினுள் நேற்று காலை 7:00 மணிக்கு நுழைந்த காட்டு மாடு வெகு நேரம் சுற்றித்திருந்தது. அதனால் மக்கள் அச்சத்துடன் நடமாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ