உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டு யானை பலி

காட்டு யானை பலி

மூணாறு : இடுக்கி மாவட்டம் நேரியமங்கலம் அருகே காஞ்சிரவேலி பகுதியில் ஆண் காட்டு யானை இறந்த நிலையில் கிடந்தது.நேரிமங்கலம் அருகே காஞ்சிரவேலி பகுதியில் உள்ள தனியார் ரப்பர் தோட்டத்திற்கு நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிக்குச் சென்றனர். அங்கு ஆண் காட்டு யானை இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கரிமணல் பகுதி வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு யானை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்