உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனப்பகுதி வறண்டதால் தவிக்கும் வனவிலங்குகள்; குடியிருப்பு பகுதிக்கு வருவதால் அச்சம்

வனப்பகுதி வறண்டதால் தவிக்கும் வனவிலங்குகள்; குடியிருப்பு பகுதிக்கு வருவதால் அச்சம்

போடி : மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மழை இன்றி வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. தண்ணீரை தேடி வன விலங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயர்வதால் உயிர் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து போடி பகுதியில் அத்தியூத்து, இலங்கா வரிசை, புலியூத்து, அடகு பாறை, வடக்குமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மழை இல்லாததால் நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் இன்றி வறண்டுள்ளன. இதனை பயன் படுத்தி மலைப்பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் வனப்பகுதிகளில் தீ ' வைத்து வருகின்றனர். காட்டுத் தீ பரவி அணைக்க முடியாமல் வனத்துறையினர் சிரமம் அடைந்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் நீர் தேங்கம் இல்லாததால் தண்ணீரை தேடி காட்டு மாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. தண்ணீர் இன்றி வனவிலங்குகள் உயிர் பலியாவதும் தொடர்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வன விலங்குகளை விரட்ட முடியாமல் விவசாயிகளும் சிரமம் அடைந்து வருவதோடு, காட்டு மாடு தாக்குதலில் பலத்த காயமும், உயிர் பலியாகும் நிலை தொடர்கிறது. வன விலங்குகளை இடம் பெயர்வதை தடுக்கும் வகையில் நீர்வரத்து உள்ள பகுதியான பந்தல்பூடு, மாம்பரளி, நாகலூத்து மெத்து, வடக்குமலை, பெரியாற்று கோம்பை உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதியில் தேங்கி உள்ள மண்ணை அகற்றியும், சுற்றி தடுப்பணை அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மழை நீர் வெளியேறுவது தடுக்கப்பட்டு நீர்த்தேக்கம் ஏற்படவும், தண்ணீரை தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயர்வது, உயிர் பலியாவதும் தவிர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ