உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண் மாயம்: கணவர் புகார்

பெண் மாயம்: கணவர் புகார்

கடமலைக்குண்டு: குமணன் தொழு அருகே மண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி 37, தனது மனைவி சங்கீதா 29, மகள் தாரண்யா 9, மற்றும் மகனுடன் போடி மெட்டு அருகே தோண்டி மலையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். ஜூன் 10 ல் செல்லப்பாண்டி குடும்பத்துடன் சொந்த ஊரான மண்ணூத்து கிராமத்திற்கு சென்றுள்ளார். மனைவி மற்றும் மகளை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு, தனது மகனை அழைத்துக் கொண்டு சின்னமனூரில் உள்ள கிருஷ்ணகிரி பள்ளியில் சேர்க்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லை. இது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்லபாண்டி புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை