உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டாஸ்மாக்கை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

டாஸ்மாக்கை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

கம்பம்: கம்பம் ஏகலூத்து ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி நேற்று காலை பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் கடை மூடப்பட்டது.கம்பம் ஏக லூத்து ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு இரவும், பகலும் மதுப்பிரியர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் இங்கு நடந்த அடிதடியில் இதே பகுதியை சேர்ந்த சாய்குமார் 20, என்பவருக்கு காயம் ஏற்பட்டது. வீட்டில் சிகிச்சையில் இருந்த சாய்குமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள் நேற்று காலை இந்த கடையால் பலர் வாழ்வு பறிபோகிறது என கூறி டாஸ்மாக்யை முற்றுகை போராட்டம் நடத்தினர். கடையில் இருந்த பணியாளர்கள் கடையை மூடினர். கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்தியன் போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ