உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உழவு இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி கை துண்டிப்பு

உழவு இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி கை துண்டிப்பு

மூணாறு: மூணாறு அருகே குண்டளை புதுக்கடியில் உழவு இயந்திரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த தொழிலாளியின் கை மருத்துவமனையில் துண்டிக்கப்பட்டது.மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் புதுக்கடி டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலை தோட்ட தொழிலாளி முனியராஜ் 38. இவர், கூடுதல் வருமானத்திற்கு தோட்ட நிர்வாகம் கொடுத்த இடத்தில் காய்கறி சாகுபடி செய்தார். அவர் தோட்டத்தில் சிறிய ரக உழவு இயந்திரம் மூலம் உழுது கொண்டிருந்தபோது, சகதியில் இயந்திரம் சிக்கிக் கொண்டது. அதனை சரி செய்ய முன்றபோது வலது கை இயந்திரத்தில் சிக்கியது. இயந்திரம் சுழன்றதால் கை, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்கு கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பலத்த காயமடைந்த கைக்கு சிகிச்சை அளிக்க இயலாத நிலை ஏற்பட்டதால் கையை துண்டித்தனர். அவருக்கு மனைவி, 8, 6 வயது பிள்ளைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை