காட்டு மாடு தாக்கி தொழிலாளி காயம்
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கடலார் எஸ்டேட், வெஸ்ட் டிவிஷனில் காட்டு மாடு தாக்கி மாடு மேய்க்கும் தொழிலாளி பலத்த காயம் அடைந்தார்.அங்கு நிரந்தர தொழிலாளியான சண்முகவேல் 55, தொழிலாளர்களின் மாடுகளை மேய்க்கும் பணி செய்து வந்தார். அவர், நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பகல் 3:30 மணிக்கு தேயிலை தோட்ட எண் 11ல் சண்முகவேலை காட்டு மாடு தாக்கியது. அவர் பலத்த காயம் அடைந்தார். அலைபேசி மூலம் தனது சகோதரருக்கு தகவல் அளித்தார். சிலரது உதவியுடன் சண்முகவேலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர், மூணாறில் டாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.