உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை இந்திரன்புரித் தெருவில் தையல்நாயகி உடனுறை சிவனேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.இக்கோயிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று வருடாபிஷேகம் நடந்தது. சுவாமி, அம்மன், நந்தீஸ்வரருக்கு பால், தயிர், தேன், பன்னீர் உட்பட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. ஈஸ்வரன் கோயில் பங்காளிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவனேஸ்வரர் கோயில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை