மேலும் செய்திகள்
தொழில்நுட்ப பணிகள் தேர்வு 1,027 பேர் 'ஆப்சென்ட்'
01-Sep-2025
தேனி: மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தொழில் நுட்ப தேர்வினை 1039 பேர் எழுதினர். 492 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம் ரோடு பிரசன்டேஷன் கான்வென்ட், கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி என 3 அமைவிடங்களில் 5 மையங்களில் நடந்தது. தேர்வு எழுத 1531 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தேர்வினை 1039 பேர் எழுதினர். 492 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாமதமாக வந்தவர்கள் மைய நுழைவாயிலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அவர்களுடன் வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
01-Sep-2025