12 கிலோ கஞ்சா:4 பேர் கைது
கம்பம்: கம்பம் பகுதியில் இருந்து கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ., தேவராஜ் தலைமையிலான போலீசார் கம்பம் பைபாஸ் ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கிரிக்கெட் மைதானம் அருகே சாக்கு பையுடன் நின்றிருந்த கம்பத்தை சேர்த்த சுஜித் குமார் 26, உசிலம்பட்டியை சேர்ந்த ரஞ்சித் பாண்டி 22, கிஷோர். நாத் 27, சுரேஷ் 28 ஆகிய நால்வரை கைது செய்தனர். அவர்கள் வைத்து இருந்த சாக்கு பையில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.