தோட்டத்தில் 13 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
பெரியகுளம்: பெரியகுளம் காடுபட்டி பகுதியில் வாசுதேவன் தோட்டத்தில் உள்ள 8 சந்தனமரங்கள் உட்பட 13 சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. வடகரை போலீசார் விசாரிக்கின்றனர். பெரியகுளம் கீழ வடகரை காடுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வாசுதேவன் 45. இவரது தென்னந்தோப்பு பகுதிகளில் பறவைகள் எச்சத்தினால் தானாக வளர்ந்த சந்தனமரங்கள் ஏராள மானவை உள்ளது. இவரது தோட்டத்தில் செப்.28ல் மர்மநபர்கள் 15 வயதுடைய 8 சந்தனமரங்களை வெட்டியுள்ளனர். பட்டைகளை உரித்து விட்டு மரங்களை கடத்தியுள்ளனர். இதே போல் அடுத்தடுத்த இரு தோட்டங்களில் 5 மரங்கள் உட்பட 13 மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். தோட்டத்தில் சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அளித்த புகாரில் வடகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த தோட்டம் அருகே தேவதானப்பட்டி வனச்சரகம் எல்கைக்கு உட் பட்டது. ரேஞ்சர் அன்பழகன் கூறுகையில்: பட்டா நிலத்தில் வளரும் சந்தன மரங்கள் திருட்டு வனத்துறைக்கு உட்படாது. போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்காக பதிவு செய்வார்கள். இருப்பினும் சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு நடவடிக்கை குறித்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.