மேலும் செய்திகள்
சைக்கிள் ரேஸ் மாரத்தான் போட்டிக்கு அழைப்பு
26-Sep-2025
தேனி: மாவட்ட நிர்வாகம், மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டி நடந்தது. அரண்மனைப்புதுார் விலக்கில் போட்டிகளை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார். போட்டிகள் மாணவர்கள், மாணவிகள் பிரிவில் 13,15,17 வயது பிரிவில் 10 கி.மீ., துாரம் முதல் 20 கி.மீ., துாரம் வரை நடந்தது. மாணவர்கள், மாணவிகள் மொத்தம் 144பேர் பங்கேற்றனர். போட்டி அரண்மனைப்புதுார் விலக்கில் தொடங்கி கொடுவிலார்பட்டி, வெங்கடாசலபுரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதுார் விலக்கில் நிறைவடைந்தது. முதல் 10 இடங்கள் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
26-Sep-2025