| ADDED : நவ 27, 2025 06:10 AM
தேனி: மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தேனியில் 10 கிலோ கஞ்சா, உத்தமபாளையத்தில் 6 கிலோ கஞ்சா கைப்பற்றி நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அன்னஞ்சி விலக்கு அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த கம்பம் கோம்பை ரோடு ராமரிடம் 66, விசாரித்தனர். அவரிடம் ரூ.1.06 லட்சம் மதிப்புள்ள 10.6 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, கைது செய்தனர். விசாரணையில் அவர், ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வந்தது தெரிந்தது. உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் குமுளி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பாச்சி பண்ணை அருகே சந்தேகப்படும் நின்றிருந்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சலுப்பனோடை பிச்சைபிள்ளையேந்தல் தமிழரசனை விசாரித்தனர். அவர் வைத்திருந்த தோள் பையை சோதனை செய்தனர். அதில் ரூ.72 ஆயிரம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.