உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 18ம் கால்வாய் பாலங்கள் சீரமைப்பு பணி * நீர்வளத்துறையினர் தகவல்

18ம் கால்வாய் பாலங்கள் சீரமைப்பு பணி * நீர்வளத்துறையினர் தகவல்

தேனி : தேவாரம் பகுதியில் 18ம் கால்வாய் துார்வாரும் பணிகள் துவங்கி உள்ளதாகவும், இந்த கால்வாயில் உள்ள 13 பாலங்களை சீரமைக்க உள்ளதாக மஞ்சளாறு வடிநில உபகோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: 18 ம் கால்வாயில் துார்வாருதல், 13 இடங்களில் பாலங்கள் சீரமைப்பு பணிக்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், விரைவில் நீர் திறக்க உள்ளதால், துறை சார்பில் தேவாரம் பகுதியில் கால்வாய் துார்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. டெண்டர் எடுத்தவர்கள் விரைவில் மற்ற பகுதிகளில் துார்வாருதல், பாலம் சீரமைத்தல் பணிகளை துவங்குவர். அதே போல் நடைபயிற்சி மேடை, பூங்கா வசதியுடனான மீறு சமுத்திர கண்மாய் மேம்பாட்டு திட்ட பணிகள் சில வாரங்களில் துவங்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை