உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பள்ளி 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிமாநில கல்வி சுற்றுலா ஏற்பாடு மாவட்டத்திற்கு 20 பேர் வீதம் தேர்வு

அரசு பள்ளி 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிமாநில கல்வி சுற்றுலா ஏற்பாடு மாவட்டத்திற்கு 20 பேர் வீதம் தேர்வு

தேனி:தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் மாவட்டத்திற்கு 20 பேரை தேர்வு செய்து வெளிமாநிலங்களுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களை வெளிமாநிலத்திற்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல கல்வித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவில் அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேரை தேர்வு செய்து அருகில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு ஒரு மாணவருக்கு ரூ.75 நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் மாவட்டத்திற்கு 20 மாணவர்களை தேர்வு செய்து வெளி மாநிலத்தில் உள்ள அறிவியல் தொடர்பான நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கல்வி சுற்றுலாவிற்கு ஒரு மாணவருக்கு தலா ரூ. 5ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பே கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை