மேலும் செய்திகள்
பாலியல் பலாத்காரம் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை
17-Apr-2025
தேனி:தேனி மாவட்டம் கம்பம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமன் முறை கொண்ட அப்பகுதியை சேர்ந்த ராஜகோபாலுக்கு 37, இருதாண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கம்பம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 15 வயது மகளுடன் தாயார் வீட்டில் வசித்தார். சிறுமி அரசு பெண்கள் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்தார். 2023 பிப்.,19ல் சிறுமிக்கு தாய்மாமன் உறவுமுறை கொண்ட ராஜகோபால் 37, இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தாயார் புகாரில் ராஜகோபாலை உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக பாதுகாப்புத்துறையில் சிறுமி ஆஜர்படுத்தப்பட்டார்.இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. உதவி அரசு வழக்கறிஞர் ரஷீதா ஆஜரானார். ராஜகோபாலுக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
17-Apr-2025