பறிமுதல் செய்யப்பட்ட 2386 லிட்டர் மதுபானம் அழிப்பு
தேனி: உத்தமபாளையம் மதுவிலக்கு பிரிவில் கடந்த ஓராண்டில் சட்டவிரோத மது விற்பனை வழக்கு 1032 பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ரூ.18.55 லட்சம் மதிப்பிலான 13,256 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இவற்றை அழிக்க எஸ்.பி., சினேஹா பிரியா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில், கலால் உதவி ஆணையர் முத்துலட்சுமி தலைமையில் டாஸ்மாக் மேலாளர் ஐயப்பன், டி.எஸ்.பி., சீராளன் முன்னிலையில் 2386 லிட்டர் மதுபானங்கள் தரையில் ஊற்றி அழிக்கப்பட்டது. மது விலக்கு இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி, தாசில்தார்கள் பாலசண் முகம், அப்துல் நஜிர் உடனிருந்தனர்.