புகையிலை கடத்திய 3 பேர் கைது
தேனி: பெங்களூருவில் இருந்து வீரபாண்டிக்கு 12 கிலோ எடையிலான புகையிலை பாக்கெட் மூடைகளை கடத்தி வந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.வீரபாண்டி எஸ்.ஐ., அசோக் தலைமையிலான போலீசார் அம்மன் நகரில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனைசெய்தனர். அதில் 12 கிலோ எடையுள்ள ரூ.6360 மதிப்புள்ள 795 புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய மூடைகள் இருந்தன. பின்னத்தேவன்பட்டி கிழக்குத்தெரு சவுந்திரபாண்டி 40,வீரபாண்டி அம்மன் நகர் மணிகண்டன் 32, அரசு மேல்நிலைப்பள்ளி தெரு செல்லகாமு 36 ஆகிய மூவரும் இணைந்து, கர்நாடகா செல்லும் போது புகையிலையை மல்லாரில் வாங்கி,தேனிக்கு கொண்டு வந்து விற்றதாக தெரிவித்தனர். மூவரையும் போலீசார் கைது செய்து, புகையிலை மூடைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.