உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மணல் திருடிய 3 பேர் கைது

மணல் திருடிய 3 பேர் கைது

கடமலைக்குண்டு; கடமலைக்குண்டு மூல வைகை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்டமனூர் எஸ்.ஐ., பாண்டியம்மாள் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். கண்டமனூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி மூல வைகை ஆற்றில் சிலர் அனுமதி இன்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த இந்திரஜித் 46, கிருஷ்ணசாமி, தாடிச்சேரி பொம்முராஜ் 25, என்பது தெரிய வந்தது. போலீசார் மணல் திருடிய 3 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி