உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கடந்த ஆண்டில் வாகன விபத்தில் 339 பேர் பலி: 1547 பேர் காயம்

 கடந்த ஆண்டில் வாகன விபத்தில் 339 பேர் பலி: 1547 பேர் காயம்

தேனி: மாவட்டத்தில் கடந்த ஆண்டில் வாகன விபத்தில் 339 பேர் உயிரிழந்துள்ளனர். 1547 காயமடைந்துள்ளதாக எஸ்.பி., சினேஹா பிரியா தெரிவித்தள்ளார். எஸ்.பி., தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டில் மாவட்டத்தில் 28 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள், 3 பெண்கள் வன்கொடுமை வழக்குகள், 35 போக்சோ வழக்கு என 81 வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. புகையிலை, போதைப்பொருட்கள் தொடர்பாக 2467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கஞ்சா தொடர்பாக 405 வழக்குகளில் 560.65 கிலோ, சட்ட விரோத மதுவிற்பனை என 1546 வழக்குகளில், 5600 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகையிலை விற்பனை தொடர்பாக 516 வழக்குகளில் 3.4 டன் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன வழக்குகளில் தொடர்புடைய 674 பேர் மீட்கப்பட்டுள்ளனர். திருட்டு குறித்து 480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ. 1.41கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்ற செயல்களை தடுக்க மாவட்டம் முழுதும் சுமார் 7731 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 339 பேர் பலி: ஓராண்டில் 1239 வாகன விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 339 பேர் இறந்துள்ளனர். 1547 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து எண்ணிக்கை 2024ஐ விட குறைவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை