உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல்

புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல்

தேனி: பெரியகுளத்தில் நேற்று முன்தினம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடந்தது.முகாமில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.வைகை அணை ரோட்டில் முதலக்கம்பட்டியில் 3 கடைகளில் புகையிலை பொருட்கள் 2.5 கிலோ பறிமுதல் செய்ப்பட்டது. கடைகளுக்கு ' சீல்' வைக்கப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 11 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர சுகாதார குறைவாக உணவுத்தயாரித்த கடைகள் என மொத்தம் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ