உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இடுக்கி உள்ளாட்சித் தேர்தலில் 30 பேர் வேட்பு மனு தாக்கல்

 இடுக்கி உள்ளாட்சித் தேர்தலில் 30 பேர் வேட்பு மனு தாக்கல்

மூணாறு: இடுக்கி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் நேற்று வரை 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மாவட்டத்தில் முதல் கட்டமாக டிச.,9ல் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் நவ.,14ல் துவங்கியது. மாவட்டத்தில் நேற்று வரை 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஊராட்சிகள்: ராஜகுமாரி 8, சாந்தாம்பாறை, நெடுங்கண்டம், ஆலக்கோடு தலா 4, அடிமாலி, கொன்னந்தடி, பாம்பாடும்பாறை, கொக்கையாறு, வண்டிப்பெரியாறு ஆகிய ஊராட்சிகளில் தலா ஒன்று வீதம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டன. இளந்தேசம் ஊராட்சி ஒன்றியம் 2, நெடுங்கண்டம் ஊராட்சி ஒன்றியம் 1, தொடுபுழா நகராட்சி 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்கள் தாக்கல் செய்ய நவ.,21 இறுதி நாள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை