அடையாள அட்டை பெற 30 சதவீத விவசாயிகளுக்கு ஆர்வமில்லை உயர் அதிகாரிகள் நெருக்கடியால் அலுவலர்கள் தவிப்பு
தேனி: தமிழகத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை பெற 30 சதவீத விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். 75 சதவீதம் இலக்கை எட்டினால் தான் மத்திய அரசின் மானியம் கிடைக்கும் என்பதால் அப்பணியயை விரைந் முடக்க உயர் அதிகாிகளின் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் புலம்பி வருகின்றனர்.மத்திய அரசு விவசாயிகளுக்கு கவுரவநிதி உதவி திட்டம் செயல்படுத்தி வருகிறது.இது தவிர இந்தாண்டு பிப் முதல் விவசாயிகளுக்கான தனி அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டை பெற பட்டா, ஆதார் எண்ணுடன் விண்ணபிக்க வேண்டும். இந்த பணி துவங்கி 10 மாதங்கள் கடந்துவிட்டது.தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் இப்பணிகள் முழுமை பெறவில்லை. தேனி மாவட்டத்தில் 54,203 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 39 ஆயிரம் பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 72 சதவீத அளவில் பணிகள் நிறைவடைந்துள்ளன.அரசு திட்டம் வேண்டாம்.இப்பணி பற்றி அலுவலர்கள் கூறுகையில், விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியில் வேளாண் தோட்டக்கலை, வேளாண் பொறியியல் வேளாண்வணிகத்துறையினர் ஈடுபட்டுள்ளோம்.அந்த அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் வரும் ஆண்டுகளில் வேளாண் தோட்டக்கலை , ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயனடைய முடியும்.ஆனால் இந்த அடையாள அட்டை வழங்குவதற்குபெரிய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த அடையாள அட்டை பற்றி தெரிவித்தாலும், அரசு திட்டம் வேண்டாம் என்கின்றனர். சில விவசாயிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.75 சதவீத நிறைவு செயல்தால் தான் பயன்.மாநில அளவில் 46:44 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு திட்டமிடப்பட்டு 32.77 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.அதாவது 70 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 75 சதவீதம் நிறைவு செய்தால் மத்திய அரசின் மானியம் பெற முடியும் என்பதால் மாநில சராசரி 75 சதவீதம் வரும் வகையில் அடையாள அட்டை பதிவு வகிதத்தை உயர்த்த அதிகாரிகள் அழுத்தம் தருகின்றனர்.ஏற்கனவே டிஜிட்டல் கிராப் சர்வே பணி, அலுவல் பணி, களப்பணி, விழிப்புணர்வு ஏற்படுத்துல் பிற திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பலபணிகளை செய்து வருகிறோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளையும் கவனித்து வருகின்றனர். கூடுதல் நெருக்கடியால் அலுவுலர்கள்பலர் உடல் நிலை சரியில்லாமலும் பாதிக்கப்படுகிறார் என்றனர்.