உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / "மணல் சுமந்த கழுதைகள் தேவாரம் போலீசிடம் சிக்கின

"மணல் சுமந்த கழுதைகள் தேவாரம் போலீசிடம் சிக்கின

தேவாரம்: கேரளாவிற்கு கழுதைகளில் மணல் கடத்திய கும்பலை போலீசார் பிடித்தனர்.தேனி மாவட்டம், தேவாரத்திலிருந்து சாக்குலூத்து மெட்டு பாதை வழியாக கழுதைகளில் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ஜான்பெஞ்சமின் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். தேவாரத்தை சேர்ந்த பெத்து, மணிகண்டன், செல்வம், கண்ணன், பரமசிவம், சுரேஷ் ஆகியோர் 82 கழுதைகளை மலைப்பாதையில் ஓட்டி வந்தனர். கழுதைகளை சோதனையிட்டதில் மணல் மூடைகளை கட்டி கேரளா கொண்டு செல்வது தெரிந்தது. மணல் மூடைகள் பறிமுதல் செய்து, கழுதைகள் விடுவிக்கப்பட்டன. எஸ்.ஐ., ஜான் கூறியதாவது: வட்டஓடை பகுதியில் மணலை அள்ளி, சாக்கு பைகளில் கட்டி கழுதைகளில் ஏற்றி, கேரளாவிற்கு கடத்தியுள்ளனர். கேரளாவில் மணல் அள்ள தடையுள்ளது. அங்கு 50 கிலோ கொண்ட ஒரு மூடை மணல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு பரிந்துரைத்துள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை