உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டாஸ்மாக்கில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற 35 பா.ஜ.,வினர் கைது

டாஸ்மாக்கில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற 35 பா.ஜ.,வினர் கைது

போடி: போடி மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடை முன்பாக பா.ஜ., சார்பில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற பா.ஜ.,கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.டாஸ்மாக் முறைகேடு கண்டித்தும், போடி காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மூடக்கோரியும் போடியில் பா.ஜ., சார்பில் டாஸ்மாக் கடை முன்பாக போதையின் பாதையில் செல்லாதீர்கள் அப்பா ஆட்சியில் மகன்களையும், மகள்களையும் குடிகாரர்களாக மாற்றி சாராய ஊழலில் கோடிக் கணக்கில் கொள்ளை அடிக்கும் அரசை கண்டிக்கிறோம் என்ற வாசகம் அடங்கிய முதல்வர் படத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் பா.ஜ., சார்பில் நடந்தது. நகர தலைவர் சித்ராதேவி தலைமையில் டாஸ்மாக் கடை முன்பாக ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற போது பா.ஜ.,வினர், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அதன் பின் கடை முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய மூயன்றனர். மாவட்ட செயலாளர் தண்டபாணி, நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன், நகர பொதுச் செயலாளர் குருநாதன், மாவட்ட முன்னாள் வர்த்தகர் அணி செயலாளர் செல்வம், நகர துணைத் தலைவர்கள் தெய்வம், தெய்வேந்திரன், நகரச் செயலாளர் புவனேஸ்வரன் உட்பட 35 பேரை போடி டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை