உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் 3டி மையம் திறப்பு

கல்லுாரியில் 3டி மையம் திறப்பு

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறையில் '3டி பிரிண்டிங்' தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லுாரிச் செயலாளர் சோமசுந்தரம், இணைச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் பேசினர். 3டி மையத்தை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் தர்மராஜன், துணைத் தலைவர் ஜீவகன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந் திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் உறவின் முறை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், கல்வி நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, இயந்திரவியல் துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி