மேலும் செய்திகள்
கஞ்சா கடத்தல் 2 வாலிபர்கள் கைது
21-Oct-2024
கூடலுார் : கூடலுாரில் கஞ்சா கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேரை கைது செய்து 6.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கூடலுார் எஸ்.ஐ., கணேசன் தலைமையில் மந்தை வாய்க்கால் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். குமுளி நோக்கி சென்ற 2 டூவீலரை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கூடலுார் கருணாநிதி காலனியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாண்டியராஜ் 46, ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் 31, பொன்மணி 20, கடலுாரைச் சேர்ந்த லென்சி 22, என தெரிய வந்தது. நான்கு பேரை கைது செய்து 6.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து தெற்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
21-Oct-2024