வேலை வாய்ப்பு முகாமில் 429 பேருக்கு பணி ஆணை
தேனி: கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். எம்.பி., தங்கதமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, பொதுச்செயலாளர் மகேஸ், பொருளாளர் வாசுதேவன், கல்லுாரி செயலாளர் தாமோதரன், கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு தேர்வான 429 பேருக்கு பணி ஆணையை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வழங்கி னார். முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் ராமபிரபா ஒருங் கிணைத்தார்.