உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பரோட்டா மாஸ்டருக்கு 45 ஆண்டு

பரோட்டா மாஸ்டருக்கு 45 ஆண்டு

தேனி:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கணவரை பிரிந்து, இரண்டு மகள்களுடன் வசித்த, 33 வயது பெண், பரோட்டா மாஸ்டரான அரிகிருஷ்ணன், 25, என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். பெண்ணின், 11, 9 வயது மகள்களை மிரட்டி, அரிகிருஷ்ணன் பலாத்காரம் செய்தார். சிறுமியர் ஜி.கல்லுப்பட்டி காப்பகத்தில் சேர்க்கப்பட்டதில், 11 வயது சிறுமி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது தெரிந்து, காப்பக மேலாளர் ஜெயராணி, தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.இதில், தாய், அரிகிருஷ்ணன் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம், அரிகிருஷ்ணனுக்கு, 45 ஆண்டுகள் சிறை, சிறுமியரின் தாய்க்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ