உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உடலுறுப்பு தானத்தில் 500 பேர் பதிவு

உடலுறுப்பு தானத்தில் 500 பேர் பதிவு

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் உடலுறுப்பு தான பதிவு செய்தல்,விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர்ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் முத்துச்சித்ரா, நலப்பணிகள் இணை இயக்குனர் கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உடலுறுப்பு தான ஆணைய ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இம் முகாமில் 500 பேர் பதிவு செய்து, இணைய வழி சான்றிதழ் பெற்றனர். முன்னதாக உடலுறுப்பு தான கையெழுத்துஇயக்கத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். உடலுறுப்பு தான ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த செல்பி பாயிண்டில் மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரியகுளத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி உடலுறுப்பு தானத்தில் இணைந்து கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை