ஆபத்தை எதிர்கொள்ள 500 மணல் மூடைகள் தயார்
கம்பம், : கம்பமெட்டு ரோடு, மேகமலை ரோடுகளில் நெடுஞ்சாலைத்துறையினர் 500 மணல் மூடைகளை தயார் நிலையில் உள்ளது என உத்தமபாளையம் நெஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளது. பருவமழை அதன் பாதிப்புக்களை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடும். கம்பமெட்டு ரோடு, - மேகமலை ரோடு, போடி மெட்டு ரோடு, குமுளி ரோடு பகுதிகளில் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுவது நடக்கும். ஆபத்தை எதிர்கொள்ள நெடுஞ்சாலைதுறை அலர்ட் செய்யப்பட்டது. அதன் எதிரொலியாக உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் 500 மணல் மூடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.உத்தமபாளையம் உதவி செயற்பொறியாளர் ராஜா , மலை பாதைகளில் ரோந்து செல்ல பணியாளர்களை வலியுறுத்தி உள்ளோம். 500 மணல் மூடைகள் தயாராக வைத்துள்ளோம். மலைப் பாதைகள் மட்டுமின்றி கண்மாய்கள், ஆற்றின் கரைகளில் உடைந்தாலும் உடனடியாக மணல் மூடைகளை அடுக்கி தடுக்க உள்ளோம். மரங்கள் விழுந்தால் அதை அப்புறப்படுத்த இயந்திர கட்டர்கள், ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.