கிளை நுாலகங்களுக்கு 55 ஆயிரம் புத்தகங்கள்
தேனி: கிராமப்புற, கிளை நுாலகங்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட நுாலகத்திற்கு 55 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளன. மாவட்ட நுாலக அலுவலர்கள் சிலர் கூறியதாவது: மாவட்டத்தில் 121 கிராமப்புற, கிளை நுாலகங்கள் உள்ளன. இங்கு வரும் வாசகர்கள் படிப்பதற்காக மாநில அரசு சார்பில் 62 ஆயிரம் புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 55 ஆயிரம் புத்தகங்கள் இதுவரை சென்னையில் இருந்து மாவட்ட நுாலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றை பிரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் கிளை நுாலகங்களுக்கு அனுப்ப உள்ளோம் என்றனர்.