உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்திய 6 பேர் கைது

 திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்திய 6 பேர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்திய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அக்.6ல் இக்கோயில் திருவிழா நடந்தது. சுவாமி ஊர்வலத்தில் நடந்த கல்வீச்சு தகராறில் பாதுகாப்பு பணியிலிருந்த சிறப்பு காவல்படை போலீஸ்காரர் யுவராஜாவுக்கு 25, தலையில் காயம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதில் தாமரைக்குளம் அம்பேத்கர் தெரு ராஜேஷ் 25, ராம்ஜி 27, சவுந்திரபாண்டி 32, சஞ்சீவி பாண்டியன் 28, பால்பாண்டி 23, பழனிமுத்து 28, ஆகிய 6 பேரை தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை